சூரியனுக்கு அண்மையில் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம்
April 2 , 2025 8 hrs 0 min 37 0
நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது, சமீபத்தில் சூரியனின்/நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தூர வரம்பிற்குள் நெருங்கியுள்ளது.
இது ஒரு ஆய்வுக் கருவி சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய குறுகிய தூரம் ஆகும் என்பதோடு எந்தவொரு விண்கலமும் இவ்வளவு நெருக்கமாக சூரியனை நெருங்கியது இல்லை.
பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது இந்த இடத்தினை நெருங்குவதற்கு ஏழு ஆண்டுகள் ஆனது.
இஸ்ரோவின் ஆதித்யா-L1 என்ற ஆய்வுக் கருவியானது, சூரியனிலிருந்து சுமாராக 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப் பட்டது.