சூரியப் பிழம்புகளின் உயர் ஆற்றல் கொண்ட ஊடுகதிர் காட்சி
November 12 , 2023 380 days 205 0
இந்தியாவின் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா-L1 சூரியப் பிழம்புகளின் உயர் ஆற்றல் கொண்ட முதல் ஊடுகதிர் காட்சியினை படம் பிடித்துள்ளது.
ஆதித்யா-L1 விண்கலத்தில் உள்ள உயர் ஆற்றல் L1 சுற்றுப்பாதை ஊடுகதிர் நிறமாலை மானி (HEL1OS) சூரியப் பிழம்புகளின் உந்துதல் மிக்க கட்டத்தினை பதிவு செய்துள்ளது.
அதிவிரைவு நேரம் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட அலைக்கற்றையுடன் கூடிய சூரியனின் உயர் ஆற்றல் கொண்ட ஊடுகதிர் செயல்பாட்டைக் கண்காணிக்கச் செய்வதற்காக இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சூரியப் பிழம்பு என்பது சூரிய வளிமண்டலத்தில் திடீரென தோன்றும் ஒரு வெகு பிரகாசமான ஒளியாகும்.
இந்தப் பிழம்புகள் ரேடியோ, ஒளியியல், புற ஊதா, மிதமான (அதிக அலைநீளம்) ஊடு கதிர்கள், கடின (குறை அலைநீளம்) ஊடு கதிர்கள் மற்றும் காமா-கதிர்கள் போன்ற மின்காந்த நிறமாலையின் அனைத்து அலைநீளங்களிலும் மேம்படுத்தப்பட்ட உமிழ்வுகளை உருவாக்குகின்றன.