TNPSC Thervupettagam

சூரியப் புயலின் மூல ஆதாரம்

June 16 , 2023 530 days 333 0
  • சூரியப் புயல் எனும் சூரியனிலிருந்து வெளியேறும் மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்கள் அல்லது பிளாஸ்மா உமிழ்வின் கதிரியக்கமானது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
  • பிளாஸ்மா மற்றும் அதனுடன் தொடர்புடையக் காந்தப்புலங்களின் பரவலை விரைவு படுத்துவது என்ன என்ற வினாவிற்கு விடையளிப்பதற்காகப் பார்க்கர் ஆய்வுக்கலம் பயன்படுத்தப்பட்டது.
  • இந்தச் சூரியப் புயலானது வேகமாகவும் மெதுவாகவும் என வெவ்வேறு வேகங்களில் பரவுகிறது.
  • பார்க்கர் ஆய்வுக் கருவி மூலம் சேகரிக்கப்பட்டத் தரவுகளானது, கரோனா துளைகளின் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
  • ஒரு ஜெட் அமைப்பு சில பிரகாசமானப் புள்ளிகளாகத் தோன்றுவதைப் போல் காட்சிப் படுத்தப் படுகிற இந்தப் பகுதிகள் சூரியனின் மேற்பரப்பிலுள்ள குளியல் குழாய்களை போன்று அமைந்துள்ளன.
  • இந்த கரோனா பகுதியில் ஏற்படும் துளைகள் சூரியனின் மண்டலத்தில் உள்ள வெப்பச் சலன  ஓட்டங்களுடன் தொடர்புடையவை என்பதை இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன.
  • ஒளிக்கோளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் காந்தப்புலங்கள் இந்த வெப்பச் சலன அடுக்குகளை உருவாக்குகின்ற நிலையில், இதன் விளைவாக புனல் போன்ற கட்டமைப்புகளுக்குள் காந்த ஆற்றல் தீவிரமடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்