TNPSC Thervupettagam
March 11 , 2020 1594 days 731 0
  • கொல்கத்தாவில் உள்ள IISER நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்ட சூரியப் புள்ளிகள் ஒரு புதிய சூரிய சுழற்சியின் தொடக்கத்தைக் குறிப்பிடுகின்றன.
  • 25வது சுழற்சி தற்பொழுது தொடங்கியதற்கான அறிகுறிகள் காணப் படுகின்றன.
  • சூரியப் புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் குளிரான இடங்களாக உள்ளன.
  • ஏறக்குறைய 11 ஆண்டுகள் நீடிக்கும் சுழற்சிகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது மற்றும் குறைகின்றது.
  • சூரியப் புள்ளிகள் ஒரு தலைமைப் புள்ளி மற்றும் பின்தொடரும் புள்ளி என்றவாறு ஜோடிகளாக நிகழ்கின்றன.
  • இவை சூரியனுக்குள் ஆழ்ந்த பகுதியில் தோன்றுகின்றன. இவை சூரியனை விட்டு வெளியேறும் போது புலப்படுகின்றன.
  • இவற்றின் எண்ணிக்கை நிலையானது அல்ல. ஆனால் குறைந்தபட்சமாக உருவாகி, பின்னர் அதிகபட்சம் வரை உயர்ந்து பின்னர் மீண்டும் குறைகின்றது. இது சூரிய சுழற்சி என்று அழைக்கப் படுகின்றது.
  • இதுவரை, வானியலாளர்கள் இது போன்ற 24 சுழற்சிகளைக் கண்டறிந்துள்ளனர். கடைசியாக 2019 ஆம் ஆண்டில் இந்த சுழற்சி நிறைவடைந்தது.
  • சுமார் 148 மில்லியன் கி.மீ தூரத்தில் இருந்து, சூரியன் அசைவின்றி நிலையானதாகத் தோன்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்