உத்தரகாண்ட் மாநில அரசு , சுவான் கலாச்சார மையம் மற்றும் அறக்கட்டளை (Swan Cultural Center and Foundation) எனும் சமூகத்தொண்டு நிதி நிறுவனத்துடன் இணைந்து “சூரியப் பெட்டி” (Solar Briefcase) எனும் திட்டத்தை கேதர்நாத்தில் துவங்கியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்துவதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.