TNPSC Thervupettagam

'சூரியா’ திட்டம் முன்னெடுப்பு

July 7 , 2022 745 days 824 0
  • ReNew அமைப்பானது UNEP மற்றும் SEWA ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட 'சூரியா’ என்றத் திட்டமானது குறைந்த வருமானம் கொண்ட 1,000 உப்பளப் பெண்  தொழிலாளர்களுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்துறையில் பணியாற்றச் செய்வதற்கானப் பயிற்சியினை அளிக்கும்.
  • ReNew அமைப்பானது இதற்கான நிதியுதவி அளித்து, அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வசதியை அப்பகுதியில் வழங்குகிறது.
  • SEWA அல்லது சுய வேலைவாய்ப்பு கொண்ட பெண்கள் சங்கம் என்ற அமைப்பானது இதன் அமலாக்கத்தில் முன்னணிப் பங்குதார அமைப்பாக விளங்கும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது இந்தத் திட்டத்தைக் கண்காணித்து மதிப்பிடுவதற்கானப் பொறுப்பினை வகிக்கும்.
  • SEWA என்பது இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள முறைசாரா பொருளாதாரத்தைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஏழை, சுய தொழில் செய்யும் பெண் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு தேசிய அளவிலான தொழிற்சங்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்