TNPSC Thervupettagam

சூறாவளிப் புயல் - கஜா

November 22 , 2018 2196 days 813 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியன்று “கஜா” என்ற சூறாவளிப் புயலானது தமிழக கடற்கரையைக் கடந்தது. இந்தப் புயலானது சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் ஆகியவற்றிற்கு இடையே கரையைக் கடந்தது.
  • இந்தப் புயலானது 120 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது.
  • இந்தப் புயலானது கேரளா நோக்கி மேற்கு திசையில் நகர்ந்து அரபிக் கடலை அடைந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
  • ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தாக்கிய டிட்லி புயலுக்குப் பின் ஒரு மாதம் கழித்து கிழக்கு கடற்கரைப் பகுதியைத் தாக்கும் இரண்டாவது புயல் கஜா ஆகும்.
  • வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை மையங்களால் புயல்கள் பெயரிடப்படுகின்றன.
  • தென் கிழக்கு ஆசியாவில் புயல்கள் வெவ்வேறு நாடுகளால் பெயரிடப்படுகின்றன. டிட்லி புயலானது பாகிஸ்தானால் பெயரிடப்பட்டது. கஜா புயலானது இலங்கையால் பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்