இந்திய வானிலை அமைப்பானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் உள்ளிட்ட வட இந்தியக் கடல் பகுதிகளில் ஏற்படும் வெப்பமண்டலச் சூறாவளிகளின் பெயர்களைக் கொண்ட ஒரு புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய பட்டியலானது இந்தியாவிலிருந்து 13 பெயர்கள் உள்பட 169 பெயர்களைக் கொண்டுள்ளது.
உலக வானிலைச் சங்கத்தின் 13 உறுப்பினர் நாடுகளால் (13 நாடுகளால் 13 பெயர்கள்) இது பரிந்துரை செய்யப் பட்டது.
இந்தியா, இலங்கை, மாலத் தீவுகள், மியான்மர், ஓமன், தாய்லாந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஈரான் ஆகியவை இந்த 13 நாடுகளாகும்.
காடி, தேஜ், ஆஷ், நீர், வியோம், ஜார், ஜலாதி, முரசு, புரோபஹோ, பிரபஞ்சன், கும்பி, அம்புட் மற்றும் லேகா ஆகிய பெயர்கள் இந்தியாவினால் வழங்கப் பட்டு உள்ளன.
அதில் நீர் மற்றும் முரசு என்பவை தமிழ்ப் பெயர்களாகும்
புது தில்லியில் உள்ள சிறப்புப் பிராந்திய வானிலை மையமானது வங்காள விரிகுடா மற்றும அரபிக் கடலில் ஏற்படும் சூறாவளிகளுக்கு பெயரிடும் பணியினை மேற்கொள்கின்றது.
2004 ஆம் ஆண்டுப் பட்டியலில் உள்ள ஒரே ஒரு பெயர் மட்டும் இன்னும் வைக்கப் படவில்லை – அது தாய்லாந்தால் அளிக்கப்பட்ட அம்பன் எனும் பெயர். மற்ற 63 பெயர்கள் அனைத்தும் வைக்கப்பட்டு விட்டன.
2004 ஆம் ஆண்டில் 8 நாடுகள் ஒவ்வொன்றும் 8 பெயர்கள் என்ற அளவில் மொத்தம் 64 பெயர்களை அளித்தன.
2004 ஆம் ஆண்டின் பட்டியலில் உள்ள 8 நாடுகள் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், பாகிஸ்தான், ஓமன், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியனவாகும்.
தற்போது இதில் சேர்க்கப் பட்டுள்ள நாடுகள் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஏமன் மற்றும் ஈரான் ஆகியனவாகும்.
சூறாவளியின் இதரப் பெயர்கள்
சீனக் கடல் மற்றும் பசுபிக் கடலில் - டைபூன்கள்.
கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் கடலில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகளில் - ஹரிக்கேன்கள்.
மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவின் கினியா பகுதியில் - டோர்நடோஸ்.