உணவுப் பாதுகாப்பின்மை, இயற்கைப் பேரிடர்கள், மக்கள்தொகை நெருக்கடி மற்றும் நீர் வள ஆபத்து ஆகிய நான்கு வகை அச்சுறுத்தல்கள் மீது இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
கடுமையான பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டிற்குள் 2.8 பில்லியனாக உயரும்.
கடுமையான பல்வேறு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதிக வாய்ப்புள்ள நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் அமைந்து உள்ளன.
இந்த அறிக்கையானது, 221 நாடுகள் மற்றும் 3,594 துணை தேசியப் பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ள சுதந்திரப் பிரதேசங்களில் மதிப்பாய்வு மேற்கொண்டது.
இப்பகுதி உலக மக்கள் தொகையில் 99.99 சதவிகிதத்தினைக் கொண்டுள்ளது.
இந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களில், 66 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலையாவது எதிர்கொள்கின்றன.
கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அளவிலான மற்றும் குறைந்த அளவிலான சமூக நெகிழ் திறன் கொண்ட 30 அதிக பாதிப்பு வாய்ப்புள்ள நாடுகளில் 19 நாடுகள் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் அமைந்துள்ளன.
எத்தியோப்பியா, நைஜர், சோமாலியா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் அதிக அச்சுறுத்தல் நிலவும் நாடுகளாகும் என்ற நிலையில், அவற்றில் எத்தியோப்பியா மற்றும் நைஜர் ஆகியவை சமீபத்தில் அதிகப் பாதிப்புகள் வாய்ப்புள்ள நாடுகளாக உருவெடுத்துள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள நாடுகள் மட்டுமே தற்போது எந்தவொரு கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ளாமல் உள்ளன.
தற்போது 42 நாடுகள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றன என்பதோடு மேலும் சுமார் நான்கு பில்லியன் மக்கள் அதிக அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் பகுதிகளில் வாழச் செய்கின்றனர்.