இது வருடாந்திர தீவிரவாத மற்றும் அமைதிக் குறியீடுகளை வெளியிடும் ஒரு கொள்கை வகுக்கும் அமைப்பான பொருளாதார மற்றும் அமைதி மையத்தினால் (IEP - Institute for Economics and Peace) தொகுக்கப் பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
அடுத்த 30 ஆண்டுகளில், அதாவது 2050 ஆம் ஆண்டுவாக்கில் 141 நாடுகள் குறைந்தது 1 சூழலியல் அச்சுறுத்தலையாவது எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், சாட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான சூழலியல் அச்சுறுத்தல்களைக் கொண்ட 19 நாடுகள் உலகில்குறைந்த அமைதியுள்ள 40 நாடுகளில் உள்ளடங்கும்.
ஆப்பிரிக்காவின் துணை சகாராப் பகுதி, தெற்கு ஆசியா, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகியவை அதிக எண்ணிக்கையிலான சூழலியல் அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றன.
2040 ஆம் ஆண்டுவாக்கில், மொத்தம் 5.4 பில்லியன் மக்கள் (உலகின் கணிக்கப் பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் மேல்) அதிக மற்றும் தீவிரமான நீர்ப் பிரச்சினையுள்ள இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 59 நாடுகளில் வசிக்க உள்ளனர்.
3.5 பில்லியன் மக்கள் 2050 ஆம் ஆண்டுவாக்கில் உணவுப் பாதுகாப்பு நிச்சயமற்றத்தன்மையினால் பாதிக்கப்படவுள்ளனர்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற அதிக இடர்களைத் தாங்கும் தன்மையுள்ள பகுதிகள் சூழலியல் அச்சுறுத்தல்களின் அதிகப்படியான தாக்குதல்களிலிருந்து விடுபடாமல் இருக்கும்.
சுவீடன், நார்வே, அயர்லாந்து, ஐஸ்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது.
ஒட்டு மொத்தமாக 16 நாடுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளாது.