TNPSC Thervupettagam

சூழல் அழிப்பு - ஒரு குற்றம்

April 3 , 2024 235 days 386 0
  • சூழல் அழிப்பினை (Ecocide - அலட்சியமான மனித நடவடிக்கைகள் மூலம் இயற்கைக் சூழலை அழித்தல்) ஒரு தேசிய மற்றும் சர்வதேசக் குற்றமாக அங்கீகரித்த முதல் ஐரோப்பிய நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது.
  • Ecocide என்பது "சில செயல்களால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான மற்றும் பரவலான அல்லது நீண்டகால சேதம் ஏற்படுவதற்கான கணிசமான வாய்ப்புகள் இருப்பதாக அறிந்தே செய்யப் படும் சட்டவிரோத அல்லது தேவையற்ற செயல்கள்" ஆகும்.
  • இந்தக் குற்றத்தினை மேற்கொள்ளும் தனிநபர்களுக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பெருநிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் யூரோ வரையிலான அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
  • மேலும், போர்க் குற்றங்கள், ஆக்கிரமிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தச் சூழல் அழிப்பினை ஐந்தாவது ‘சர்வதேசக் குற்றமாக’ பெல்ஜியம் அரசு அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்