ஹைதி கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் செங்கடலைச் சுற்றி பயணிக்கும் கப்பல்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வு அதிகரிப்பிற்குப் பங்களிக்கின்றன.
சூயஸ் கணவாய் வழியாகச் செல்வதற்குப் பதிலாக, கப்பல்கள் டிசம்பர் மாத நடுப் பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிய ஒரு நீண்ட பாதையில் செல்ல வேண்டியதாயிற்று.
இந்த திசைதிருப்பல் ஆனது கடந்த நான்கு மாதங்களில் சுமார் 13.6 மில்லியன் டன்கள் கூடுதலாக CO2 உமிழ்வினை ஏற்படுத்தியுள்ளது.
இது அதே காலக் கட்டத்தில் சுமார் 9 மில்லியன் மகிழுந்துகளால் வெளியிடப்பட்ட மாசுபாட்டிற்குச் சமம் ஆகும்.