ஆழ் கடல் சுரங்க வேலையின் பாதிப்பின் காரணமாக “செதில் பாத நத்தை” என்ற ஒரு அரிய வகை நத்தை இனம் “அச்சுறுத்தப்பட்ட இனமாக” அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதலாவது இனமாக உருவெடுத்து இருக்கின்றது.
இது மடகாஸ்கருக்கு அருகில் இந்தியப் பெருங்கடலின் நிலப்பரப்பில் மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
இது 2019 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று தனது திருத்தப்பட்ட சிவப்புப் பட்டியலில் “அருகி வரும் இனமாக” சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தினால் (International Union for Conservation of Nature - IUCN) சேர்க்கப்பட்டது.
தற்பொழுது உலகளவில் அனைத்து கடற்பரப்பு சுரங்க நடவடிக்கைகளிலும் முடக்கம் காணப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடற்பரப்பு ஆணையமானது கடற்பரப்பு சுரங்கத் தொழிலை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை தற்பொழுது தயாரித்துக் கொண்டிருக்கின்றது.