TNPSC Thervupettagam

செந்நிற மின்னிறக்கம்

March 24 , 2024 117 days 102 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விண்வெளி வீரர் ஒருவர் சமீபத்தில் செந்நிற மின்னிறக்கம் (ரெட் ஸ்ப்ரைட்) என்று அழைக்கப்படும் ஓர் அசாதாரண நிகழ்வை புகைப் படம் எடுத்துள்ளார்.
  • இந்தப் புகைப்படங்கள் டென்மார்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தோர்-டேவிஸ் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
  • இந்தச் சோதனையானது மேல் வளிமண்டலத்தில் ஏற்படும் மின்னல் மற்றும் புவி வெப்பமடைதலில் தாக்கத்தினை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயு அளவுகளில் அதன் தாக்கங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அறிவியலாளர்கள், புகைப்படத்தில் உள்ள செந்நிற மின்னிறக்கத்தின் பரிமாணங்கள் தோராயமாக 26 கிலோமீட்டருக்கு 14 (16.2 மைலுக்கு 8.7) என்ற வேகம் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
  • ஒரு செந்நிற மின்னிறக்கம் ஆனது ஒரு நிலையற்ற ஒளிர்தல் நிகழ்வு (TLE) என வகைப் படுத்தப் பட்டுள்ள ஓர் அசாதாரணமான வானிலை நிகழ்வைக் குறிக்கிறது.
  • அவ்வப்போது செந்நிற மின்னல் என்று அழைக்கப்படுகின்ற இந்த நிகழ்வு ஆனது, பூமியின் மேற்பரப்பில் இருந்து 40 முதல் 80 கிலோமீட்டர்கள் (25 - 50 மைல்கள்) என்ற உயரத்தில் இடி மேகங்களுக்கு மேலே நிகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்