TNPSC Thervupettagam

செந்நிறக் கோள் தினம் - நவம்பர் 28

November 29 , 2023 234 days 220 0
  • 1964 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்கலமான மரைனர் 4 விண்ணில் ஏவப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
  • மரைனர் 4 நிலவில் உள்ளது போன்ற மோதல் பள்ளங்களை (அவற்றில் சில பனியால் நிரம்பியவை) செவ்வாய் கொண்டிருப்பதைக் காட்டும் படங்களை மனிதர்கள் பார்க்க உதவியது.
  • செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு ஆனது அரிக்கப்பட்ட சிவப்பு மண், பாறை மற்றும் இரும்பு ஆக்சைடால் உருவான தூசியால் மூடப்பட்டிருப்பதால் அது செந்நிறக் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
  • செந்நிறக் கிரகத்திற்கு டெய்மோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரண்டு துணைக் கோள்கள் உள்ளன.
  • சூரியனிலிருந்து நான்காவதாக அமைந்த கிரகமான இது செவ்வாய்க் கிரகம் ஆனது சூரியனில் இருந்தும் பூமியிலிருந்தும் தோராயமாக 227,936,637 கிலோமீட்டர்கள் (141 மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது.
  • அக்கோளினை அடைய 300 நாட்கள் (சுமார் எட்டு மாதங்கள்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்