TNPSC Thervupettagam

செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம்

June 21 , 2024 10 days 180 0
  • உலகின் மிக உயரமான எஃகினால் ஆன வளைவு இரயில் பாலமான செனாப் பாலத்தில் இந்திய இரயில்வே சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது.
  • இந்த உலகின் மிக உயரமான இரயில் பாலம் ஆனது செனாப் ஆற்றின் மீது 359 மீ (1,178 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது பாரீசு நகரின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் உயரமானது.
  • இது உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா புதிய இரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப் பட்டது.
  • இந்தப் பாதையானது, ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான், பத்காம், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்