TNPSC Thervupettagam
December 22 , 2021 978 days 629 0
  • உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களில் இதுவரை கண்டிராத சுயபிரதிபலிப்புத் தன்மையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இவை தவளை செல்களைப் பயன்படுத்தி ஆய்வகங்களில் உருவாக்கப் பட்டன.
  • செனோபாட்ஸ் (Xenobots) என்பவை பல்வேறு உயிரித் திசுக்களை ஒன்றிணைந்து கட்டமைக்கப்பட்ட சில விருப்பச் செயல்களை மேற்கொள்வதற்காக கணினிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கையான உயிர் உடைய வடிவங்களாகும்.
  • இவற்றிற்கு ஆப்பிரிக்காவின் நகங்களைக் கொண்ட தவளையின் பெயரானது (செனோபஸ் லேவிஸ்) சூட்டப்பட்டுள்ளது.
  • உலகின் முதலாவது செனோபாட்ஸ் ஆனது 2020 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நகமுடைய தவளை செல்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டன.
  • இந்த செனோபாட்ஸ் மனித உடலில் புற்றுநோய் செல்களைக் கண்டறிதல் அல்லது கடலில் உள்ள தீங்கு விளைக்கும் நுண் நெகிழிகளைச் சேகரிப்பது போன்ற பயனுள்ள செயல்பாடுகளைச் செய்ய வருங்காலத்தில் பயன்படுத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்