ஒரு சர்வதேச ஆய்வு அறிக்கையானது பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் (United Nations Office for Disaster Risk Reduction - UNDRR) வெளியிடப்பட்டது.
இது மிக அதிகமான கால நிலை மாற்றங்களின் காரணமாக புதிய மற்றும் மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது. இது குறிப்பாக ஆசிய பசிபிக் பொருளாதாரங்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பின்வருவனவற்றிலிருந்து மனிதர்களுக்கு அபாயங்கள் நிகழும் என்று இது கூறியுள்ளது.
காற்று மாசுபாடு
உயிரியல் அபாயங்கள்
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள்.
நாடுகள் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கையில் முதலீடு செய்யாவிட்டால் அதன் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகித அளவிற்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று இது கணித்துள்ளது.
உலகளாவிய மதீப்பீட்டு அறிக்கையானது (GAR - Global Assessment Report) சென்டாய் கட்டமைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது.
சென்டாய் கட்டமைப்பு
இது 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது பேரழிவினால் மரணங்களையும் பொருளாதார இழப்புகளையும் குறைப்பதைப் பற்றி விவரிக்கின்றது.
இது முன் எச்சரிக்கை அமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அபாய நிர்வாகத்தை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.