- பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் (Punjab and Maharastra Bank – PMC Bank) பொறுப்பினை ஏற்பதற்கான முன்மொழிதலுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
- வங்கி அல்லாத கடன் வழங்கு நிறுவனமான சென்ட்ரம் நிதிச் சேவை நிறுவனம் மற்றும் நிதித் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனமான பாரத்பே ஆகியவற்றின் கூட்டமைப்பானது PMC வங்கியின் பொறுப்பினை ஏற்க உள்ளது.
- PMC வங்கியினுடைய வீழ்ச்சியின் பின்னணியில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல்
- ஒரு சிறு நிதியியல் வங்கியினை அமைப்பதற்காக சென்ட்ரம் நிறுவனத்திற்கு கொள்கை ரீதியிலான ஒரு ஒப்புதலை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.
- இது வருடாந்திர உரிமம் வழங்கும் விதிமுறைகளின் கீழ் அமைக்கப்படும்.
- வருடாந்திர உரிமம் வழங்கும் விதிமுறை என்பது வங்கிகளுக்குப் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் வழங்குவதற்குப் பதிலாக தொடர் உரிமம் வழங்குவதாகும்.