TNPSC Thervupettagam

சென்னா ஸ்பெக்டாபிலிஸ்

November 6 , 2022 624 days 413 0
  • முதுமலை புலிகள் காப்பகப் பாதுகாப்புத் தாங்கு மண்டலங்களில் சென்னா ஸ்பெக்டாபிலிஸ் என்ற தாவர இனம் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை ஒரு விரிவான உத்தியை உருவாக்கியுள்ளது.
  • சென்னா ஸ்பெக்டாபிலிஸ் என்பது பிரகாசமான மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட ஒரு அயல்நாட்டு ஆக்கிரமிப்பு இனமாகும்.
  • தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து ஒரு அலங்கார வகை தாவர இனமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய மற்றும் தாங்கு மண்டலங்களில் உள்ள சீகூர் பீடபூமியில் இது அதிகளவில் பரவிக் காணப்படுகிறது.
  • நீலகிரி பகுதியில் காணப்படும் ஐந்து முக்கிய ஆக்கிரமிப்பு வகை களைச் செடிகளில் இதுவும் ஒன்றாகும்.
  • லந்தானா கமாரா, வேலிப் புதர்ச் செடிகள், யூகலிப்டஸ் மற்றும் பைன் ஆகியவை இப்பகுதியில் உள்ள மற்ற 4 வெளிப்புற ஆக்கிரமிப்பு இனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்