குடியரசுத் தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகளை நியமித்தார்.
ஐந்து புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம், 52 என்ற அளவாக இருந்த உயர் நீதிமன்றத்தின் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையானது 57 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும்.
மூன்று புதிய பெண் நீதிபதிகள் பதவியேற்ற பிறகு உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தன் மூலம் அது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
புதிய நீதிபதிகளில் ஒருவரான திருமதி விக்டோரியா கௌரிஎன்பவரது நியமனத்தை சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்கள் குழு அவர் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக "வெறுக்கத் தக்க உரைகளை" வழங்கியதாகக் கூறி எதிர்த்தது.
ஆனால் அவர் பதவிப் பிரமாணம் செய்து முடித்ததையடுத்து, அவரது தகுதி அடிப்படையில் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.