TNPSC Thervupettagam

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்

January 16 , 2019 2141 days 999 0
  • 2010 ஆம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (Chennai Unified Metropolitan Transport Authority- CUMTA) சட்டமும் அதனோடு தொடர்புடைய விதிமுறைகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
  • சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நகரத் திட்டமிடும் அதிகாரி (போக்குவரத்து) இந்த சென்னை ஒருங்கிணைந்தப் பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் இந்த குழுமம் செயல்படும்.
  • போக்குவரத்துத் துறையில் நுட்பம் வாய்ந்தவர், நகரப் போக்குவரத்துத் துறையில் திட்டமிடுதல், மேலாண்மை, செயல்பாடுகள், இயந்திரவியல் பொருளாதாரம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களில் அனுபவமும் அறிவும் கொண்ட நிபுணர் ஆகியோர் இக்குழுவில் அரசால் நியமிக்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்