தமிழ்நாட்டில் உள்ள சென்னை - கன்னியாகுமரி தொழிற் துறை பெருவழிப் பாதையின் (Chennai - Kanyakumari Industrial Corridor - CKIC) தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு இடையேயான மின் இணைப்பை வலுப்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியானது (Asian Development Bank - ADB) 451 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
கிழக்குக் கடற்கரைப் பொருளாதார பெருவழிப் பாதையானது (East Coast Economic Corridor - ECEC) இந்தியாவின் முதலாவது கடலோரப் பொருளாதாரப் பெருவழிப் பாதையாகும். இது இந்தியக் கடற்கரையின் 2500 கிலோ மீட்டர் தொலைவை உள்ளடக்கியுள்ளது. ECEC ஆனது ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட இருக்கின்றது.
CKIC ஆனது ECECன் இரண்டாவது நிலையாகும்.
CKIC மற்றும் அதன் உள்கட்டமைப்புத் திட்டமானது தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வை 2023 மற்றும் சாகர்மலா முன்முயற்சி ஆகியவற்றின் வரிசையில் அமைய இருக்கின்றது.