ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்திய அரசும் 484 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை-கன்னியாகுமரி தொழில்துறை பெருவழிப் பாதையில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் தொழில்துறை மேம்பாட்டு வசதியை உருவாக்குவதற்காகவும் வேண்டி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்துறை பெருவழிப் பாதையானது மேற்கு வங்கம் தொடங்கி தமிழகம் வரை நீளும் இந்திய கிழக்கு கடற்கரைப் பொருளாதார பெரு வழித் தடத்தின் ஓர் அங்கமாகும்.