TNPSC Thervupettagam

சென்னை - சேலம் விமான போக்குவரத்து

March 28 , 2018 2304 days 813 0
  • மண்டல இணைப்புகள் (Regional Connectivity) வழங்குதல் வரிசையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சென்னை - சேலம் விமானப் போக்குவரத்தை முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • உடான் திட்டத்தின் மண்டல இணைப்புத் திட்டத்தின் கீழ் இந்த விமான சேவை தொடரும்.
  • ட்ருஜெட் (ஹைதராபாத்தைச் சேர்ந்த டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனம்), இவ்வழித்தடத்தில் விமான சேவையை வழங்கும். 72 இருக்கைகள் கொண்ட இவ்விமானத்தில் 50% இருக்கைகள் உடான் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சேலத்தில் 1993ல் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்ட போது தனியார் விமான நிறுவனமான NEPC, சேலம் வழியாக சென்னை – கோயம்புத்தூர் விமான போக்குவரத்து சேவையை வழங்கியது.
  • இவ்விமானப் போக்குவரத்து சேவை போதிய ஆதரவில்லாத காரணத்தால் குறுகிய காலகட்டத்திலேயே கைவிடப்பட்டது.
  • மீண்டும் 2009ல் சேலம் விமான நிலையம், விமானப் போக்குவரத்தைத் தொடங்கிய போது தற்போது செயல்பாட்டிலில்லாத கிங் பிஷர் விமான நிறுவனம் விமானங்களை இயக்கியது.
  • இந்த சேவையும், தீடீரென 2011ல் நிறுத்தப்பட்டது அதோடு சேலம் விமான நிலையமும் மூடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்