1639 ஆம் ஆண்டின் இந்நாளில் தான் மெட்ராஸ் (சென்னை) நகரம் நிறுவப்பட்டதாக நம்பப் படுகிறது.
இந்நாளில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டமைப்பதற்காக சுதேச அரசரிடமிருந்து நிலம் ஒன்றை வாங்கி கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தினால் இந்த நவீன கால நகரத்திற்கான அடித்தளம் நிறுவப்பட்டது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக ஆண்ட்ரு கோகன் என்பவரும் பிரான்சிஸ் டே என்பவரும் விஜயநகரப் பேரரசின் ஆளுநரான தாமர்லா வெங்கடாத்ரி நாயக்கர் என்பவரிடமிருந்து இந்த இடத்தினை வாங்கினர்.
இந்த ஆண்டு இந்த நகரம் நிறுவப்பட்டதன் 383வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்படும் ஒரு நடைமுறையானது தொடங்கியது.