TNPSC Thervupettagam

சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்கு ரோரோ கப்பல் பயணம்

October 29 , 2017 2631 days 899 0
  • பொதுவகை சரக்கு கப்பலும் ‘ரோரோ’(Ro-Ro) (Ro-Ro) வகையினையும் சேர்ந்த எம்.வி.ஐ,டி,எம் டூடுள் (V. IDM DOODLE ) என்ற கப்பலின்  சென்னை துறைமுகத்திலிருந்து வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்க்கான பயணத்தை, மத்திய நீர்வளத்துறை அமைச்சரான நிதின்கட்கரி இலக்கமுறையில் தொடங்கிவைத்தார்.
  • இந்தியா மற்றும் வங்கதேசம்  இடையேயான கடல்வழி கப்பல் போக்குவரத்து ஒப்பந்தமானது (Coastal Shipping Agreement) ஜீன் 2015ல் பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப்  பயணத்தின் போது கையெழுத்திடப்பட்டது.
  • இந்தியத் துறைமுகங்களிலிருந்து வங்கதேசத்தின் துறைமுகங்கள் வரையிலான கடல்வழிப் போக்குவரத்தானது உடன்படிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு கடலோரப் போக்குவரத்துக்கு இணையாக கருதப்படுவதால், கப்பல் மற்றும் சரக்கு தொடர்பான கட்டணங்களில் 40% சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • இந்திய துறைமுகங்களில் ரோரோ கப்பல்கள் மூலமான கடல்வழிப் போக்குவரத்துக்கு, சரக்கு மற்றும் கப்பல் தொடர்பான கட்டணங்களில் 80% சலுகைகள் வழங்கப்படுகிறன.
  • கடல்வழிப் போக்குவரத்தில் ஒரு டன் சரக்குகளுக்கான எரிபொருள் செலவு மிகவும் குறைவாக உள்ளதால் கடல்வழிப் போக்குவரத்தானது சுற்றுச்சூழலில் கரிமத்தின் அடிச்சுவட்டை (Carbon Footprint) குறைக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்