பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 ஆக உள்ள மாநகர நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த தமிழக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் வளங்களை சமமாக விநியோகிப்பதையும் அரசுச் சேவைகளை திறன்மிகு முறையில் வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்ததன் மூலம் GCC ஆனது 2011 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் அதன் புவியியல் எல்லைகள் 426 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டில், சென்னையின் மக்கள் தொகை 66.72 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 85 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை மாநகரம் ஆனது 15 மண்டலங்களாகவும் 200 வார்டுகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.