சென்னை பெருநகர மாநகராட்சிக் கழகத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக் குறைவான பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது.
வருவாய் வரவுகள் ஆனது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக பட்சமாக 4,464.60 கோடி ரூபாயாக இருந்தாலும், இந்த நிதியாண்டில் மூலதன வரவுகள் சிறிதளவு குறைவாக 3,455 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடு ஆனது 3,554.5 கோடி ரூபாய் ஆக இருந்தது.
நகரில் உள்ள 419 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப் படும்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 255 பள்ளிகளில் தலா நான்கு கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்படும்.
208 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு முதல் முறையாக ஒரு ஜோடி காலணிகள் மற்றும் இரண்டு ஜோடி காலுறைகள் வழங்கப்படும்.
நகரில் உள்ள அனைத்துத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் நகர சபை உறுப்பினர்கள் தலைமையிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப் படும்.
இடரில் உள்ள தாய்மார்கள் உதவி அழைப்பு அணுகல் மையங்கள் நகரில் அமைக்கப் படும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 4 பேருந்துகளை மாநகராட்சி வாங்கும்.
நகரில் உள்ள 200 (வட்டாரங்களிலும்) வார்டுகளிலும் EmpowHER எனப்படும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும்.