சென்னையில் உள்ள 3 மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு மாநிலத்தின் மறைந்த 3 முன்னாள் முதல்வர்களின் பெயர்களை இடுவதற்காக தமிழ்நாடு அரசு ஒரு ஆணையைப் பிறப்பித்துள்ளது.
அந்த அரசாணையின் படி, ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையமானது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையமானது “புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ” என்றும் கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையமானது “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சி.ம்.பி.டி மெட்ரோ” என்றும் அழைக்கப்படும்.
தில்லி மெட்ரோ மற்றும் ஹைதராபாத் மெட்ரோ ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் உள்ள மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ அமைப்பு சென்னைமெட்ரோ ஆகும்.