சென்னையின் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகியவற்றில் உள்ள 2 வானிலையியல் மையங்கள் உலக வானிலையியல் அமைப்பினால் (World Meteorological Organisation) நீண்ட காலமாக கண்காணிப்பை மேற்கொள்ளும் நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
100 ஆண்டுகளுக்கும் மேலாக கா நிலைக் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் இந்தியாவில் உள்ள 5 இதர நிலையங்களிடையே இந்த 2 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இது காலநிலை மாறுபாட்டை மதிப்பிடுவதற்கும் காலநிலை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியப் பதிவுகளாகப் பயன்படுத்தக்கூடிய 100 ஆண்டுத் தகவல்களைப் பராமரித்தலுக்கான ஒரு சிறப்பு அங்கீகரிப்பாகும்.,
1792 ஆம் ஆண்டில் நாட்டின் முதலாவது வானிலையியல் நிலையம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.