- சென்னை பெருநகரத்திற்குள் வெள்ளம் ஏற்படுவதை கணிப்பதற்காக சென்னை வெள்ள எச்சரிக்கை அமைப்பு (C-Flows) என்ற அமைப்பை தேசிய கடல் ஆராய்ச்சி மையம் (National Centre for Coastal Research - NCCR) ஆரம்பித்துள்ளது.
- மிக அதிக மழைப் பொழிவினால் கடல் மட்ட உயர்வின் மூலம் நகருக்குள் வெள்ளம் ஏற்படுவதை 6 தொகுதிகளைக் கொண்ட இந்த அமைப்பு கணிக்கும். மேலும் சென்னை நகரத்தில் அமைந்துள்ள
- கூவம்
- அடையாறு
- கொசஸ்தலையர்
ஆகிய மூன்று ஆறுகளின் நீர் நிலைகளின் அளவை இந்த அமைப்பு கணிக்கும்.
- மாநில அரசாங்கமானது எச்சரிக்கை அமைப்பில் பயன்படுத்தப்படும் நிர்வாக எல்லைகள் (ward boundaries), மக்கள் தொகை விவரங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் போன்றவற்றைப் பகிர்ந்துள்ளது.
- மேலும் C-Flows ஆனது TN-SMART உடன் ஒருங்கிணைக்கப் படவிருக்கிறது.