TNPSC Thervupettagam

சென்னை – மைசூரு வந்தே பாரத் விரைவு வண்டி

November 19 , 2022 611 days 931 0
  • பெங்களூரு KSR ரயில் நிலையத்தில் சென்னை – மைசூரு வந்தே பாரத் விரைவு வண்டியினையும், பாரத் கௌரவ் காசி யாத்திரை என்ற ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
  • இது இந்தியாவின் ஐந்தாவதும், தென்னிந்தியாவின் முதலாவதுமான வந்தே பாரத் விரைவு வண்டியாகும்.
  • மற்ற நான்கு வண்டிகள் புதுதில்லி-வாரணாசி, புதுதில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காத்ரா, காந்திநகர்-மும்பை மற்றும் புதுதில்லி-உனா ஆகிய வழித்தடங்களில் ஓடிக் கொண்டு இருக்கின்றன.
  • இது பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைப்பு இரயில் பெட்டித் தொழிற்சாலையில் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது.
  • வந்தே பாரத் என்பது ஒரு மித-அதிவேக இரயிலாகும்.
  • இது ஒரு தன்னைத் தானே உந்திக் கொள்ளும் இயந்திரம் கொண்ட ஒரு இரயிலாகும்.
  • இது தனியாக அதற்கென்று ஒரு இயந்திரத்தைக் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்