TNPSC Thervupettagam

சென்னைக் கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்

August 20 , 2019 1796 days 668 0
  • சென்னைக் கடற்கரையில் “கடல் ஒளிர்வி” (Sea Tinkle) காணப்பட்டது. இது உயிரின ஒளிர்வு என்றும் அழைக்கப்படுகின்றது.
  • கடல் ஒளிர்வி என்று பொதுவாக அழைக்கப்படும் நொக்டிலூகா பாசிகள் இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்துள்ளன.
  • இந்தக் கடற்பாசிகளுக்குத் தீங்கு ஏற்பட்டால் இந்தக் கடற்பாசிகள் உயிரின ஒளிர்வை அல்லது உயிரியல் மூலம் ஒளியை வெளிப்படுத்துகின்றன.
  • ஆக்ஸிஜனின் முன்னிலையில் ஒரு வேதியியல் வினை மூலம் ஒளி உருவாகின்றது. இதில்  “லூசிஃபெரேஸ்” (ஒளி தரும்) எனப்படும் ஒரு நொதி பங்கு பெறுகின்றது.
  • கோவா, மும்பை மற்றும் கேரளாவின் கழிமுகங்கள் ஆகிய பகுதிகள் ஏற்கெனவே இந்தப் பாசிப் பெருக்கத்தைக் கண்டுள்ளன.
  • இந்தப் பாசித் திட்டுகள் கடற்கரை மாசுபாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளன.

Image result for blue sea in chennai

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்