TNPSC Thervupettagam

சென்னையின் நீடித்த மற்றும் நிலையான நகர்ப்புறச் சேவைகள்

October 5 , 2021 1152 days 568 0
  • சென்னையின் நீடித்த மற்றும் நிலையான நகர்ப்புறச் சேவைகளுக்கு உதவி வழங்கச் செய்வதற்காக வேண்டி 150 மில்லியன் டாலர் அளவிலான திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நகரத்தை “உலகத்தரம் வாய்ந்த நகரமாக” மாற்ற வேண்டி இந்த முயற்சியானது மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்தத் திட்டமானது சென்னையை மேலும் பசுமை வாய்ந்த, வாழ்வதற்கு ஏதுவான மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஒரு நகரமாக மாற்றுவதற்கான தமிழக அரசின் குறிக்கோளினை நிறைவேற்றச் செய்யும்.
  • இது நகரின் நான்கு முக்கிய நகர்ப்புறச் சேவைகளின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு வரும். அவை
    • தண்ணீர் வழங்கீடு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பு
    • இயங்குதிறன் (போக்குவரத்து)
    • சுகாதாரம் மற்றும்
    • திடக்கழிவு மேலாண்மை
  • தமிழ்நாட்டிற்கான இத்திட்டம் தவிர, மேகாலயா மாநிலத்திலும் சுகாதாரச் சேவைகளின் தர மேம்பாட்டிற்கான 40 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கும் உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்