சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க பன்னாட்டு கப்பல் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனமான ஒருங்கிணைந்தச் சரக்குச் சிப்பங்கள் சேவை (UPS) தொழில் நுட்ப மையத்தினை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த UPS மையம்தான் இந்தியாவில் அந்த நிறுவனம் அமைத்துள்ள இத்தகைய முதல் மையமாகும்.
2025 ஆம் ஆண்டிற்குள் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 15 முதல் 20 மில்லியன் டாலர் வரை அந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது.