முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் தானியங்கி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தைத் திறந்து வைத்துள்ளார்.
இந்த மையமானது சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மின்னணுக் கழகத்தில் (ELCOT SEZ - Electronics Corporation of Tamil Nadu’s Special Economic Zone) அமைந்துள்ளது.
இந்த மையத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இயக்க அனுபவ ஆய்வகம் அமைந்துள்ளதாகும்.