TNPSC Thervupettagam

சென்னையில் உயிரொளிர்வு அலைகள்

October 26 , 2024 27 days 57 0
  • சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலை கடற்கரையானது சமீபத்தில் ஒரு அரிய உயிரொளிர்வு அலைகளால் மின்னியது.
  • உயிரொளிர்வு என்பது சில கடல் உயிரினங்களால், முதன்மையாக டைனோ ஃப்ளா ஜெல்லட்டுகள் எனப்படுகின்ற ஒரு நுண்ணிய பிளாங்க்டன் போன்றவற்றால் உற்பத்தி செய்யப் படும் இயற்கையான ஒளிர்வு நிகழ்வு ஆகும்.
  • இந்தச் சிறிய உயிரினங்கள் ஆனவை அலை இயக்கம் அல்லது தண்ணீரில் உள்ள மற்ற இடையூறுகள் மூலம் தூண்டுவிக்கப் படும் போது தங்கள் உடலில் ஓர் இரசாயன எதிர் வினை மூலம் ஒளியை உமிழ்கின்றன.
  • இதன் விளைவாக அலைகள் நீல-பச்சை நிறங்களில் ஒளிர்கின்றன.
  • கடல்வாழ் உயிரினங்கள் என்பவை வேட்டையாடும் உயர் உயிரினங்களுக்கு எதிரான பாதுகாப்பு, இரையை ஈர்ப்பது மற்றும் தகவல் தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உயிரொளிர்வு நிகழ்வினைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்