TNPSC Thervupettagam

சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தின் நூற்றாண்டு விழா

May 4 , 2023 573 days 289 0
  • மதராஸ் மாகாணத்தில் (தற்போதைய சென்னை) முதலாவது மே தினமானது, 1923 ஆம் ஆண்டில் தொழிற்சங்கத் தலைவர் M.சிங்காரவேலு அவர்களால் கொண்டாடப்பட்டது.
  • தொழிலாளர் கிசான் கட்சியானது மதராஸ் மாகாணத்தில் மே தினக் கொண்டாட்டங்களை அறிமுகப் படுத்தியது.
  • இந்தக் கூட்டத்திற்கு தோழர் சிங்காரவேலர் தலைமை தாங்கினார்.
  • ‘சிந்தனைச் சிற்பி’ என்று அறியப்பட்ட இவர், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஆவார்.
  • 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கான்பூர் நகரில் நடைபெற்ற முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டில், மே தினத்தினை முதன்முதலில் விடுமுறை நாளாக அறிவித்தது தி.மு.க. அரசாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்