மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்துடன் (JNARDOC - Jawaharlal Nehru Aluminium Research Development and Design Centre) இணைந்து “செம்மண்ணின்” திறனுள்ள பயன்பாடு மீதான ஒரு பயிலரங்கத்தை புது தில்லியில் ஒருங்கிணைத்தது.
பாக்ஸைட் கழிவான செம்மண் என்பது அலுமினியத்தின் உற்பத்திச் செயல்பாடுகளின் போது உருவாகும் ஒரு திடக் கழிவாகும்.
எரிசோடா மற்றும் இதர கனிமங்கள் போன்ற கழிவுகள் இதில் இருப்பதன் காரணமாக இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.