இந்த அறிக்கை CITES என்ற அமைப்பினால் பட்டியலிடப்பட்ட செம்மர இனங்களின் பண்புகள், சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் பங்குகள், மீளுருவாக்க விகிதங்கள் மற்றும் அவற்றிற்கான அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்த பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
இந்தத் தகவல் ஆனது, CITES ஒப்பந்த அமைப்பின் அங்கத்தினராக விளங்கும் நாடுகளுக்குத் தகவலறிந்த தீங்கற்ற கண்டுபிடிப்புகளை (NDFs) மேற்கொள்ள உதவும்.
"பாலிசாண்டர்" என்றும் அழைக்கப்படும் ‘செம்மரம்’ ஃபேபேசியே (லெகுமினோசே) பேரினத்தினைச் சேர்ந்த பரந்த அளவிலான வெப்பமண்டல வன்மரங்களை உள்ளடக்கியது.
CITES நிறுவனமானது, செம்மரங்களை நிலையான முறையில் வெட்டுதல் மற்றும் வர்த்தகத்திற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
CITES அமைப்பின் IIவது பின்னிணைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
டால்பெர்ஜியா லடிஃப்போலியா (மலபார் கருங்காலி) மற்றும் டால்பெர்ஜியா சிஷோ (சிஷம்) ஆகியவை இந்தியாவில் காணப்படுகின்றன என்பதோடு அவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மற்றும் குறைந்த பட்ச பாதுகாப்பு கவனம் அவசியம் கொண்ட இனம் எனவும் பட்டியலிடப் பட்டுள்ளது.
ஆப்பிரிக்க செம்மரம் ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.