கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் "செயற்கை இலையை" உருவாக்கி உள்ளனர்.
சூரிய ஒளியின் சக்தியைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடை திரவ எரிபொருளாக இதனால் மாற்ற முடியும்.
இவை முக்கியமாக உள் எரிப்பு வாகனங்களில் நேரடியாக உள்ளீட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப் படலாம்.
அவர்கள் ஒளிச் சேர்க்கைச் செயல்முறையைப் பிரதி எடுத்தல் மூலம் கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் சூரிய ஒளியை எத்தனால் மற்றும் புரோபனால் என்ற இரண்டு கார்பன் எரிபொருட்களாக மாற்றலாம்.