TNPSC Thervupettagam

செயற்கை நிலவு - சீனாவின் திட்டம்

October 22 , 2018 2227 days 678 0
  • 2020-ம் ஆண்டிற்குள்ளாக நகரப் பகுதிகளில் இருக்கும் தெரு விளக்குகளை மாற்றி அமைத்து மின்கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கையாக சீனா தனக்கென்று சொந்தமாக ஒரு செயற்கை நிலவை நிறுவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இதற்காக, சீனாவானது உண்மையான நிலவுடன் இணைந்து செயல்படக் கூடிய அதே சமயம் அதைவிட எட்டு மடங்கு பிரகாசமான ஒளியூட்டு செயற்கைக் கொள்கைளை வடிவமைத்திருக்கின்றது.
  • சூரியனிடமிருந்து வரும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஒளியூட்டக்கூடிய வகையில் நகரப் பகுதிகளில் தெரு விளக்குகளை மாற்றியமைக்கின்ற வகையில் இந்த செயற்கைக் கோள்கள் இருக்கும்.

பின்னணி

  • சூரிய ஒளியைப் பிரதிபலித்து பூமிக்குத் திரும்ப அனுப்பும் முயற்சியில் ஈடுபடும் முதல் நாடு சீனா கிடையாது.
  • 1990 ஆம் ஆண்டுகளில் ரஷ்ய விஞ்ஞானிகள் நாம்யா அல்லது பானர் என்றழைக்கப்பட்ட பரிசோதனைத் திட்டத்தில் விண்வெளியிலிருந்து ஒளியைப் பிரதிபலித்திட மிகப்பெரிய கண்ணாடிகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்