செயற்கை நுண்ணறிவு (AI), தொடர் சங்கிலி மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த கொள்கைகள்
September 23 , 2020 1582 days 1623 0
நாட்டில் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் அறநெறி சார்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI), தொடர் சங்கிலி மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த கொள்கைகளை வெளியிடும் முதலாவது மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து உள்ளது.
இந்தக் கொள்கையானது 2020 ஆம் ஆண்டிற்கான கனெக்ட் என்ற மாநாட்டின் 19வது பதிப்பின் நிறைவு விழாவின் போது தமிழ்நாடு மாநில முதலமைச்சரால் வெளியிடப் பட்டது.
இந்தக் கொள்கையானது AI-ஐ அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளின் பரிணாமத்திற்கான 6 பரிணாம டிஏஎம்-டிஇஎப் (TAM-DEF) என்ற கட்டமைப்பைப் பரிந்துரைக்கின்றது.
வெளிப்படைத் தன்மை & தணிக்கை, பொறுப்புடைமை, சட்டப்பூர்வ பிரச்சினைகள், தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்பு, டிஜிட்டல் பகுப்பு & தரவுப் பற்றாக்குறை, அறநெறி கொண்டது, நியாயமானது & பங்களிப்பு கொண்டது போன்ற கட்டமைப்பின் கூறுகளானது மேற்கூறிய பரிணாமமானது ஜனநாயக விழுமியங்களைச் சீரமைப்பதை உறுதி செய்கின்றது.