செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புற்றுநோயைக் கண்டறியும் கருவி
July 18 , 2022
865 days
623
- சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, ‘PIVOT’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியினை உருவாக்கியுள்ளது.
- PIVOT ஆனது நோயாளிகளின் உடலில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணித்து அவற்றைக் கண்டறியும் திறன் கொண்டது.
- இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியானது தனிப் பயனாக்கப் பட்ட புற்றுநோய்ச் சிகிச்சைக்கான உத்திகளை வகுப்பதில் உதவும்.
- புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணிப்பதற்காக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இது புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக, சடுதி மாற்றம் மற்றும் மரபணு வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு தரவுகளைப் பயன்படுத்துகிறது.
Post Views:
623