TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு

October 20 , 2023 274 days 205 0
  • இரயில் பாதைகளில் காட்டு யானைகள் இரயில்களில் அடிபடுவதைத் தடுக்க தமிழகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் எட்டிமடை- வாளையாறு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
  • இது திண்தோல் கொண்ட இந்த விலங்கினங்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கும்.
  • இத்திட்டத்திற்காக இரட்டை ஒற்றைக் கோபுர வரிசையின் – ‘A’ வரிசையில் ஐந்தும், ‘B’ வரிசையில் ஏழுமாக மொத்தம் 12 இணைய வழி கண்காணிப்பு கோபுரங்களை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது.
  • 2008 முதல் 2022 வரையிலான காலக் கட்டத்தில், கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளை இணைக்கும் இரண்டு இரயில் பாதைகளில் நிகழ்ந்த ஆறு இரயில் மோதலில் மொத்தம் 11 யானைகள் இறந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்