செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு
October 20 , 2023 402 days 260 0
இரயில் பாதைகளில் காட்டு யானைகள் இரயில்களில் அடிபடுவதைத் தடுக்க தமிழகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் எட்டிமடை- வாளையாறு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இது திண்தோல் கொண்ட இந்த விலங்கினங்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கும்.
இத்திட்டத்திற்காக இரட்டை ஒற்றைக் கோபுர வரிசையின் – ‘A’ வரிசையில் ஐந்தும், ‘B’ வரிசையில் ஏழுமாக மொத்தம் 12 இணைய வழி கண்காணிப்பு கோபுரங்களை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது.
2008 முதல் 2022 வரையிலான காலக் கட்டத்தில், கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளை இணைக்கும் இரண்டு இரயில் பாதைகளில் நிகழ்ந்த ஆறு இரயில் மோதலில் மொத்தம் 11 யானைகள் இறந்தன.