TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு – ஆளில்லா குட்டி விமானங்கள்

May 15 , 2019 2023 days 798 0
  • பேரிடர்களின்போது மீட்புப் பணிகளுக்காக முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஹெக்சாகாப்டர் என்ற ஒரு ஆளில்லா குட்டி விமானத்தை சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
  • இந்தக் குட்டி விமானத்தினால் பறக்க முடியும். இது முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களைத் தானாகவே கண்டறியும்.
  • இது செயற்பாட்டு அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் தனி நபர்களைக் கண்டறியும்.
  • இது விரைவான மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காக நிகழ்நேரத்தில் மக்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைத் தலைமை நிலையத்திற்கு அனுப்பும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்