பொருளாதார சீர்திருத்தங்களில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை (Artificial Intelligence – AI ) புகுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு 18 பேரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதை அமைத்துள்ளது
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) பேராசிரியர் காமகோடி இக்குழுவின் தலைவராக இருப்பார்.
இக்குழுவானது தனது அறிக்கையை அரசு மற்றும் தொழிற்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அளிக்கும்.