TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அடையாளம் காணல் தொழில்நுட்பம் மூலமான தகவல் சரிபார்ப்பு

May 23 , 2023 554 days 272 0
  • தொலைத் தொடர்புத் துறை (DoT) ஆனது, தொலைத்தொடர்பு சந்தாதாரர் அடையாள சில்லுகளின் (SIM) சந்தாதாரர் சரிபார்ப்பு (ASTR) செயற்கருவிக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அடையாளம் காணல் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஒரு நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது மோசடியான கைபேசி இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அடையாளம் காணல் தொழில்நுட்பம் மூலமான தகவல் சரிபார்ப்பு அமைப்பானது, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையிலான காலகட்டத்தில் ஹரியானாவில் உள்ள தொலைத்தொடர்புத் துறையின் பிரிவினால் உருவாக்கப்பட்டது.
  • இது 1 கோடி புகைப்படங்களைக் கொண்ட தரவுத் தளத்திலிருந்து 10 வினாடிகளுக்குள் சந்தேகத்திற்குரிய முகம் சார்ந்த அனைத்து சந்தாதாரர் அடையாளச் சில்லுகளையும் கண்டறியும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்